என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைல் ஜாமிசன்"
- நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
- ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வெலிங்டன்:
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்டு 30, செப்டம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 8, 10, 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. முன்னதாக நியூசிலாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி துபாயில் வருகிற 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியில், கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இதேபோல் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இருவரது வருகையும் நியூசிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல். போட்டியின் போது முழங்காலில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து தேறி வருகிறார். அவர் அணியினருடன் இங்கிலாந்து சென்று காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ள இருக்கிறார். வில்லியம்சன் ஆட முடியாததால் டாம் லாதம் கேப்டனாக தொடருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-
20 ஓவர் அணி: டிம் சவுதி (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாப்மேன், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் செய்பெர்ட், சோதி.
ஒருநாள் போட்டி அணி: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலென், டிரென்ட் பவுல்ட், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, வில் யங்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்