search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஐஎஸ்எப் வீரர் கைது"

    • பாகிஸ்தான் பெண் குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • சி.எஸ்.எஸ்.எப். வீரரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    திருமலை:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கபில் என்ற ஜெகதீஷ் பாய் முராரி (வயது 35). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சி.ஐ.எஸ்.எப் வீரராக உள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இருவரும் செல்போன் எண்கள் பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தமிஷா, கபீலை தேடி விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அவருடன் கபில் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    இரவு நேரங்களில் பாகிஸ்தான் இளம்பெண் நிர்வாண வீடியோ காலில் பேசி மயக்கினார்.

    இதற்கிடையில் கபிலின் செல்போனுக்கு அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வருவதை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

    அவரது செல்போன் உரையாடல் குறித்து ரா அமைப்பு விசாரித்தது.

    அதில் இரும்பு உருக்காலை மற்றும் தொழில் நுட்ப ரகசியங்கள் மற்றும் இந்திய நாட்டு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தான் பெண்ணுக்கு கபில் உளவு சொன்னது தெரிந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பெண் குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில் இளம்பெண் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும், கபிலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இந்திய நாட்டு ரகசியங்களை அறிந்து தங்களது தீவிரவாத அமைப்புக்கு தெரிவித்து வந்ததும் தெரிந்தது.

    சி.எஸ்.எஸ்.எப். வீரரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் பேஸ்புக்கில் பாகிஸ்தான் பெண்ணுடன் செய்த எஸ்.எம்.எஸ் குறித்தும் விசாரித்தனர்.

    இதுகுறித்து விசாகப்பட்டினம் கமிஷனர் விக்ரம வர்மா உத்தரவின் பேரில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி கபில் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் கபீல் கைது செய்யப்பட்டார்.

    ×