search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டிலான"

    • கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட சிவகிரி பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி னார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரி யில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி னார்.

    இம்முகாமில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட சிவகிரி பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    மனுநீதி முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மகளிர் திட்டம், வே ளாண்மை உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்க லைத்து றை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறை யில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டு மெனவும், இன்றைய தினம் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்டு ள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக நடை பெற்று வரும் முகாம்களை வருகின்ற 16-ந் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.9,00,000 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா க்களும், 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றும்,

    2 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றும், 58 பயனாளிகளுக்கு ரூ.26,74,043 மதிப்பீட்டில் ரயத்துமனை நிறுத்தப்பட்ட இனங்களும், 11 பயளாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணையி னையும்,

    25 பயனாளிகளுக்கு இணைவழி உட்பிரிவு, நத்தம் உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணையினையும், சமுக பாதுகாப்பு திட்ட த்தின் கீழ் 35 பயனா ளிகளுக்கு ரூ.5,08,500 மதிப்பீட்டிலான பல்வேறு உதவித்தொகை யினையும் வழங்கப்பட்டது.

    12 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டையினையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6,00,000 மதிப்பீட்டிலான கடனுதவினையும் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.11,35,567 மதிப்பீட்டிலான வேளாண் உபகரணங்களும் என 190 பயனாளிகளுக்கு ரூ.58,18,110 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றை,

    பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.  

    ×