என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 349075
நீங்கள் தேடியது "மசூதி இடிந்து பலி"
- மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
- கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது.
நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.
மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கடுனா கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது. இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
×

X