search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிதாக 113 ரேசன்"

    • சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    11 லட்சம் குடும்ப அட்டைகள்

    முதல்-அமைச்சர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,258 முழு நேர ரேசன் கடைகள் மற்றும் 456 பகுதி நேர ரேசன் கடைகள் மொத்தம் 1,714 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடைகளில் சுமார் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வருகிறார்கள்.

    அந்தவகையில் மாதந்தோறும் அரிசி 17,747 மெ.டன், சர்க்கரை -1,383 மெ.டன். கோதுமை 285 மெ.டன். துவரம் பருப்பு-763 மெ.டன், பாமாயில்-851 மெ.டன் என ஆக மொத்தம் 21,029 மெ.டன் குடிமைப் பொருட்கள் சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் குடிமைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்குகளிலிருந்து கூட்டுறவுத் துறையின் முதன்மைச் சங்கங்கள் மற்றும் சுய எடுப்புச் சங்கங்கள் மூலமாக ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரிசியினை அன்றாடம் மாதிரி சேகரித்து அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு தர கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுத் துறை ஆய்வு அலுவலர்கள், முதன்மைச் சங்கங்களின் நகர்வு பணியாளர்கள் ஆகியோரால் தரம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தரமான அரிசியினை மட்டுமே ரேசன் கடைகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது. இந்த ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

    ×