search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருவிளக்கு வெளிச்சம்"

    • தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவி வீட்டுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.
    • ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமய–நல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த–வர் சின்னையா (வயது 56), சமையல் உதவியாளர். இவரது மனைவி சுதா (41). தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், கபிலேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜனனி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கபிலேஷ் 7-ம் வகுப்பும் படித்து வரு–கின்றனர். இவர்கள் சொந்த இடத்தில் மண் மதில் வீடு கட்டி ஓடுகளால் மேற்கூரை அமைத்து வசித்து வருகின்ற–னர்.

    இவர்களது வீட்டிற்கு நேற்று வரை மின்சார இணைப்பு இல்லை. கார–ணம், இவர்கள் வீட்டின் அருகில் மின்சார லைன்கள் எதுவும் செல்ல வில்லை. அதற்கு தனியாக மின் கம்பம் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்கமுடி–யும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்து விட்டனர். அதற்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என்பதாலும், பணவசதி இல்லாததால் மின் இணைப்பு பெற முடியாம–லும் அவதிப்பட்டு வந்த–னர்.

    அதனால் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜனனி, கபிலேஷ் இருவரும் இரவு நேரங்களில் வீட்டு பாடங் கள் எழுதி, படித்து வந்தனர். இந்த ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் தங்களது சொந்த செலவில் மின்கம் பம் அமைத்து மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று மின் இணைப்பு வழங்கி மின் விளக்கு வசதி ஏற்ப–டுத்தி தரப்பட்டது.

    இந்த மின்இணைப்பு பெற்றுத்தந்த தலைமை நிர்வாக அலுவலர் பால–கிருஷ்ணன், அசோக்குமார், சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் மற்றும் அறக்கட்டளையினருக்கு சின்னையா, சுதா, ஜனனி, கபிலேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜீவானந்தம் மனோகரன், கருணாநிதி பொன்னுத்தாய், உமா மகேஸ்வரன் உறவினர்க–ளும், நண்பர்கள், பொது–மக்களும் நன்றி தெரிவித்த–னர்.

    ×