என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் நடவடிக்கை"
- தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி,
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், சிவசாமியின் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் ராமகவுண்டர் பேசும் போது தமிழக அரசு கடந்த காலங்களில் கர்நாடகா அரசுடன் பேசி, காவிரியில் இருந்து தண்ணீரை விடுவிக்க வைத்து காய்ந்து போன நெல் பயிர்களை காப்பாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், நட்பு ரீதியில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா முதல் மந்திரியுடன் பேசி தண்ணீரை விடுவிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அதே போல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்னும் இடத்தில் தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜா, பெருமாள், அசோக்குமார், வேலு, வரதராஜ், நசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனுமந்த ராஜ் நன்றி கூறினார்.