search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊஞ்சல் உற்சவ விழா"

    • அம்மனுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
    • பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் சாலையில் மாரியம்மன் மற்றும் பிளாக் மாரியம்மன் கோவில்கள் உள்ளது. கோவிலில் ஆடி 4 வெள்ளிக்கிழமைகளில் அரசன், வேம்பு, மாவலிங்க மூன்றும் இணைந்த மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வளம் வந்து ஊஞ்சலில் வைக்கப்பட்ட மாரியம்மன், பிளேக் மாரியம்மன் உற்சவர்களை பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.

    பின்பு அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்துள்ள இரு உற்சவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விளக்கு பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறு, வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×