என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்மை"
- அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன.
- காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மும்பையின் உரோலியில் உள்ள கோலிவாடா பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்த கார் விபத்து பரபரப்பை ஏற்படுதத்தி வருகிறது. தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் மீன் வாங்க சென்ற காவேரி நாக்வா என்ற பெண் பின்னால் இருந்து வந்து இடித்து பி.எம்.டபில்யூ காரின் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மிஹிர் தலைமறைவான நிலையில் இளைஞனின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்து நடந்தபோது மிஹிர் ஷாவுடன் காருக்குள் இருந்த அவரின் குடும்ப ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவாத் கைது செய்யப்டயுள்ளார்.
இந்நிலையில்அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூலமும் போலீஸ் கைப்பற்றிய சிசிடிவி மூலமும் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. தற்போது போலீஸ் கைப்பற்றியுள்ள சிசிடிவி வீடியோவில் மிஹிர் விபத்து ஏற்படுத்தியவுடன், காரை நிறுத்தாமல் ஒட்டவே, 1.5 கி.மீட்டருக்கு பானட்டில் சிக்கிய காவேரி இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் காரை நிறுத்திய மிஹிர் மற்றும் அவரது ஓட்டுநர் ராஜ்ரிஷி காரில் இருந்து இறங்கி, படுகாயமடைந்த காவேரியை பான்ட்டில் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளனர். பின்னர் மிஹிருடன் காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றது பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், விபத்து குறித்து மிஹிர் தனது தந்தை ராஜேஷ் ஷாவுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். மகனை தப்பிக்க வைக்க திட்டமிட்ட ராஜேஷ் ஷா, மெர்ஸண்டிஸ் காரில் வந்து காலா நகர் என்ற இடத்தில் மிஹிரை மெர்ஸண்டிசில் ஏற்றி தப்பிக்க வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ காரை ஓட்டுநர் ராஜ்ரிஷி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசை நம்பவைக்க ராஜேஷ் ஷா திட்டமிட்டிருந்த்ததும் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடப்பதற்கு முன் மிஹிர் மதுபான பாரில் இருந்து வெளியில் வரும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் கைப்பற்றியுள்ளது.
புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் விபத்தை ஏற்படுத்திய மிஹிர், தந்தை ராஜேஷ் ஷா, ஓட்டுநர் ராஜ்ரிஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி முழுமையான அறிதல் இல்லாததால் போலீஸ் விளக்கம் அளிக்க திணறியதால், அவர்களை நன்கு தயார் செய்துகொண்டு வந்து வழக்கு குறித்து பேசுமாறு நீதிபதி தெரிவித்தது குறிப்பிடதக்கது. மேலும் தற்போது ராஜேஷ் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மிஹிர் ஷாவை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
- இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அபித்குமார் (வயது 19) இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த பெற்றோர், தன் மகனின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து உண்மையை விசாரித்து பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாரை விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நியமித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்