search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய் கடி"

    • ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.
    • குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொயிலாண்டி அருகே உள்ள கப்பாட் கடற்கரைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்க அங்கு குதிரை சவாரி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடும் ஒரு குதிரையை கடந்த மாதம் 19-ந் தேதி வெறிநாய் கடித்தது.

    இதனை தொடர்ந்து அந்த குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதனால் குதிரை ஆரோக்கியமாக காணப்பட்டது. இதனால் ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அந்த குதிரைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இன்று காலை குதிரை பரிதாபமாக இறந்தது.

    இதனை தொடர்ந்து சமீப காலமாக குதிரையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குதிரை உரிமையாளர் மற்றும் சவாரி செய்த சுற்றுலா பயணிகள் தகுந்த பரிசோதனைகள் செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கன்னியம்பட்டி நடுத்தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து சாலையில் ஆவேசமாக ஓடியது.

    அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ரியாசினி மற்றும் வெள்ளத்தாய் என்ற 70 வயது மூதாட்டி உள்பட 4 பேரை கடித்து குதறியது. இதனைதொடர்ந்து அவர்கள் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரியாசினிக்கு காயம் பெரியஅளவில் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ஆட்டோவில் பயணிக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    ×