search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை 2023"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெரும்பாலான ரசிகர்கள், இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாதா?... என தலையில் அடித்துக் கொண்டனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.

    ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதை உயிர்ப்போகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவு எடுக்கப்பட்டு வருவதுதான் துரதிருஷ்டவசமானது. வேதனைக்குரியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்திய வீரர் முகமது சமியின் தாயார் அனும் அரா உத்தர பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த தனது கிராமத்தில் கண்டுகளித்தார். போட்டியின் போது பதட்டம் அடைந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சை பெற மற்றொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அதன்படி சுகாதார மையத்திற்கு விரைந்த சமியின் தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    "அவர் காய்ச்சல் மற்றும் பதட்டம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை, சீராக உள்ளது," என சமியின் உறவினர் மும்தாஸ் தகவல் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    • துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல.
    • போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என முகமது சமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முகமது சமி கூறியிருப்பதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய பிரதமருக்கு நன்றி...மீண்டும் வருவோம்...மீண்டு வருவோம்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார்.
    • அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    அகமதாபாத்:

    உலகக்கோப்பை இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம்.
    • நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என தோல்வியடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அது மட்டுமின்றி இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து ஜடேஜா எக்ஸ் தளத்தில் மோடியின் வருகை ஊக்கமளிப்பதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம். ஆனால் நேற்று குறுகிய காலத்தில் அது முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து முன்னேற துண்டுகிறது. பிரதமர் மோடி எங்கள் ஓய்வு அறைக்கு வருகை தந்தது சிறப்பானது மற்றும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்தனர்.
    • ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பா மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் உலகக் கோப்பை 2023-க்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியின் இடம் பிடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பாவும் தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், நியூசிலாந்து அணியில் டெய்ரி மிட்செல், இலங்கை அணியில் மதுஷன்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 12-வது வீரராக தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி இடம் பிடித்துள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பையை அனைத்து வீரர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி பார்த்திருப்போம். முத்தமிடுவதையும் கட்டி அணைப்பதையும் கோப்பை முன் நின்று புகைப்படம் எடுப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த வீரர் மிட்செல் மார்ஷ், தனது காலை கோப்பைக்கு மேல் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டது கவலையாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த உலகக் கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் கொண்டாடிருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய கோப்பை ஆஸ்திரேலிய அணி வீரர் காலில் இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • ரோகித் சர்மா நேற்று அடித்த 3 சிக்சரையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிக்சர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது.
    • இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:-

    இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மாற்றமின்றி தொடர்ந்து 7 ஆட்டங்களில் அதே வீரர்களை களம் இறக்கியது ஒரு வகையில் சாதனையாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 6 ஆட்டங்களில் ஒரே மாதிரியான லெவன் அணியை விளையாட வைத்து இருந்தது.

    இறுதி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 29 ரன் எடுத்த போது, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் திரட்டிய கேப்டனான நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை தகர்த்தார். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 11 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 597 ரன்கள் சேர்த்துள்ளார்.

    அரைஇறுதியில் 117 ரன்கள் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி இறுதி ஆட்டத்தில் 54 ரன்கள் எடுத்தார். ஒரு உலகக் கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் 50 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது வீரர் கோலி ஆவார். ஏற்கனவே மைக் பிரேயர்லி (இங்கிலாந்து, 1979-ம் ஆண்டு), டேவிட் பூன் (ஆஸ்திரேலியா, 1987), ஜாவித் மியாண்டட் (பாகிஸ்தான், 1992), அரவிந்த டி சில்வா (இலங்கை, 1996), கிரான்ட் எலியாட் (நியூசிலாந்து, 2015), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா, 2015) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். 8-வது வீரராக இந்த பட்டியலில் டிராவிஸ் ஹெட்டும் இணைந்தார்.

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 11 ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனின் சாதனையை (2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்) சமன் செய்தார்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று அடித்த 3 சிக்சரையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிக்சர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர் அடித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 10 ஓவர்களில் 34 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் 10 ஓவர் முழுமையாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காத ஒரே வீரர் இவர் தான்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் 5 கேட்ச் பிடித்தார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 5 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்றார்.

    இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.

    2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியதே, உலகக் கோப்பை ஒன்றில் ஒரு அணியின் அதிகபட்ச விக்கெட் வேட்டையாக இருந்தது. அச்சாதனையை இந்தியா நேற்று 3-வது விக்கெட் எடுத்த போது முறியடித்தது.

    • ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார்.
    • கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கொப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை  நேசிக்கிறோம். அடுத்ததை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.
    • முகமது சிராஜ் புதுப்பந்தில் பும்ராவுடன் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

    1. சுப்மன் கில் சொற்ப ரன்களில் அவுட்

    இந்த தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, அவருக்கு துணையாக சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் ஸ்டார்க் பந்தில் தேவையில்லாமல் ஆஃப் சைடு வந்த பந்தை லெக்சைடு தூக்கி அடிக்க முயற்சி செய்து, மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்தார். அவர் 5-வது ஓவரில் ஆட்டமிழக்க, விராட் கோலி உடனடியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா 10-வது ஓவரில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் அய்யரும் விரைவாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்மன் கில் சுமார் 10 ஓவரை வரையாவது நிலைத்து நின்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்திருக்கும்.

    2. மிடில் ஓவரில் மந்தமான ஸ்கோர்

    10.3-வது ஓவரில் விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11-வது ஓவரில் இருந்து 20 ஓவர் வரை இந்தியாவுக்கு 35 ரன்கள், 21-வது ஓவரில் இருந்து 30-வது ஓவர் வரை 37 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே கிடைத்தது. 10-வது ஓவருக்குப் பிறகு 4 பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தது.

    3  சூர்யகுமார் யாதவை பின்னால் வைத்தது

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும்போது, சூர்யகுமாருக்கு பதிலாக ஜடேஜா களம் இறக்கப்பட்டார். ஜடேஜாவால் 22 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஒருவேளை கே.எல். ராகுல் உடன் ஜோடி சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால், அவரால் அதிரடியாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. என்றபோதிலும், போட்டி முடிவடைவதற்கு 15 பந்துகளுக்கு முன்னதாக 28 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டார். கடைசி வரை நின்றிருந்தால் கூடுதல் ரன்கள் வந்திருக்கலாம்

    4. முகமது சிராஜிக்கு புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு வழங்காதது

    தொடர் முழுவதும் பும்ரா உடன் முகமது சிராஜ் புது பந்தில் பந்து வீசி வந்தார். இந்த போட்டியில் பும்ரா உடன் முகமது சமி பந்து வீசினார். இந்தியா 3 விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தியது. என்றாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய நிலையில், முகமது சிராஜால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் புதுப்பந்தில் சிறப்பாகத்தான் பந்து வீசி வந்தார். இதுவும் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது எனலாம்.

    5. ஆக்ரோசமான தாக்குதல் இல்லாமல் போனது

    எப்போதும் துடிப்புடன் விளையாடும் இந்திய அணி ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவை 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது. அதன்பின் டிராவிஸ் ஹெட் (137)- லபுஷேன் (58*) ஆகியோரை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டனர். இவர்கள் 192 ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிட்டது.

    • மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.
    • முகமது சமி 24 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடரில் முத்திரை படைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.

    1. விராட் கோலி (765) அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    2. மேக்ஸ்வெல் (201*) தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்

    3. டி கா (4) அதிக சதம் அடித்த வீரர்

    4. ரோகித் சர்மா (31) அதிக சிக்ஸ் அடித்த வீரர்

    5. முகமது சமி (24) அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    6. முகமது சமி (7/57) ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    7. டி காக் (20) அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்

    8. டேரில் மிட்செல் (11) அதிக கேட்ச் பிடித்த பீல்டர்

    அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது

    1. மொஹிந்தர் அமர்நாத் (1983)

    2. அரவிந்த டி சில்வா (1996)

    3. ஷேன் வார்னே (1999)

    4. டிராவிஸ் ஹெட் (2023)

    இறுதிப் போட்டியில் மட்டும் தோற்கடிக்கப்பட்ட அணி

    1. இங்கிலாந்து (197- 4 வெற்றிகள்)

    2. நியூசிலாந்து (2015- 8 வெற்றிகள்)

    3. இந்தியா (2023- 10 வெற்றிகள்)

    ×