search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உலக கால்பந்து போட்டி"

    • அவர் பதவி விலகியதாக நேற்று செய்திகள் பரவின.
    • மன்னிப்பு கேட்ட போதிலும் பதவி விலக மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.

    மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது.

    லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்துள்ளது. 

    ×