search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலையில் அமைச்சர்ஆய்வு"

    • சம்பள உயர்வு, போனஸ் குறித்த தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
    • ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    அரவேணு -

    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நீலகிரி மாவட்டத்தில் சுற்று ப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக அவர்

    கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் குயின்சோலை பகுதியில் உள்ள டேன் டீ தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர், அங்கு தயாராகும் தேயிலை தூளின் தரம், தொழிற்சாலை உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, பணியில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா, குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகளும் உள்ளதா? என கேட்டறி ந்தார்.

    அப்போது சம்பள உயர்வு, போனஸ் குறித்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    பின்னர் கொடநாடு பகுதியில் வனத்துறை கட்டு ப்பாட்டில் உள்ள கோடு தேன்மந்து, நேர்தேன்மந்து ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    நிகழ்ச்சியில் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வனஅலுவலர் கவுதம், நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி வட்டார வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், கீழ்க்கோத்தகிரி வனசரக அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×