search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை காட்டுயானை"

    • யானை சாலையின் நடுவே நின்று கொண்டது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    உடுமலை:

    கேரள மாநிலம் மூணாறுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    வனப்பகுதியான உடுமலை-மூணாறு சாலையில் அவ்வப்போது யானைகள் உலா வருவது வழக்கம். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலை-மூணாறு சாலையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஒற்றை யானை ஒய்யாரமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


    மேலும் அந்த யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. நீண்ட நேரமாக நின்றதால் உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பலர் தங்களது செல்போன்களில் யானையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

    • வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.
    • வனத்துறையினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சியையொட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கள்ளிப்பட்டி அருகே உள்ள சுண்டக்கரடு மலை வாழ் மக்கள் காலனிக்குள் இரவு நேரங்களில் புகுந்து உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கணக்கம்பாளையம் ஊரா ட்சி சுண்டக்கரடு பகுதியில் செந்தில் என்ற விவசாயி தனது 2½ ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். 8 மாதங்களே ஆன வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.

    கடந்த 10 நாட்களாக கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சி வன எல்லையில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வரும் தனியார் சிலரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பயிர்க ளை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    வனப்பகுதியில் இருந்து சுண்டக்கரடு பகுதியில் உள்ள ஊருக்குள் யானை செல்லா மல் இருக்க வனத்துறையின ரால் அகழி தோண்டப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் பாறை பகுதி உள்ளதால் அகழி தோண்டப்படாத தாலும், அகழி முற்புதர்களால் மண் மூடி கிடப்பதாலும் பராமரிப்பு இன்றி காணப்படு வதால் வன எல்லையில் இருந்து காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக விவசா யிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே காட்டு யானை ஊருக்குள் புகாமலும், விவ சாய பயிர்களை சேதப்படு த்தாத வகையிலும் அகழிகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு, ஊர்ப்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேரில் சம்பவ இடத்திற்கு சென்ற டி.என்.பாளையம் வனத்துறை யினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்து சென்றனர்.

    ×