search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய் எஸ் ஷர்மிளா"

    • ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா, கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. - ஜனசேனா மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோரின் தாயார் விஜயம்மா, எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடப்பாவில் போட்டியிடும் தனது மகளிற்கு ஆதரவளிக்கும் விதமாக 'ஷர்மிளாவிற்கு ஓட்டு போடுங்கள்' என்று மக்களை வலியுறுத்தி தனது விருப்பத்தை தெரிவித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
    • சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

    தெலுங்கானா மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் ஒய்.எஸ். ஷர்மிளா.ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    காங்கிரசுடனும் அவர் நெருக்கம் காட்டி வந்தார். கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமாரையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியில் சோனியாகாந்தியை திடீரென சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது காங்கிரசுடன் கட்சியை இணைத்து செயல்படுவதா? என்பது தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஷர்மிளா சோனியாவை சந்தித்த பேசி உள்ளது. தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×