என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காந்த உருண்டைகள்"
- உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).
இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.
பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.