என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழைய வீடு"
- வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம்.
- நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையம் திட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர்( 45 ). விவசாயி. இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு கட்டிய வீடு தற்போது பள்ளத்தில் இருப்பதால் வீட்டை இடிக்க மனமின்றி அதை உயர்த்த நவீன தொழில்நுட்ப மூலம் தனது வீட்டை வானங்களுக்கு பயன்படுத்தும் ஜாக்கிகள் மூலம் 3 அடி உயரம் தூக்கி கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் சுதாகர் கூறியதாவது:-
எங்களது பூர்வீக இடத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் புது வீடு கட்டினோம். கீழ்த்தளம் 2000 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது சாலை உயரமாகி போய் வீடு பள்ளமானது. மேலும் வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம். மேலும் பழைய வீட்டை இடிக்க மனம் இல்லாததால் மிகவும் குழம்பிப்போனோம்.
அப்போது கரூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்போது வீட்டை இடிக்காமல் பெயர்த்து வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்துக்கு மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். உயரமாக்கப்பட்டு கட்டப்படும் சில வீடுகளில் நேரில் சென்று பார்த்து அதிசயத்தோம். தற்போது எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் மூன்றடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சுந்தரமூர்த்தி என்பவர் கூறியதாவது:- ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரை மட்டத்திலிருந்து பெயர்த்து தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த 1-ந் தேதி பணிகளை தொடங்கினோம்.
இன்னும் 30 நாட்களில் பணிகள் முடிந்து விடும். கட்டிடத்தை உயர்த்த ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். மேலும் கட்டடத்துக்கு ஏற்ற போல் 600 ஜாக்கிகள் வரை பயன்படுத்துகிறோம். தற்போது இந்த கட்டிடத்திற்கு 175 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி வருகிறோம்.
வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை பரமத்திவேலூர் தாலுகா கள்ளிப்பாளையம் திட்டமேட்டில் உள்ள சுதாகர் வீட்டில் 15 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2000 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களில் இருபுறம் தோண்டி. அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர்.
அந்த வீட்டிற்கு 175 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, தேவையான உயரத்துக்கு 15 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கல்களை வைத்து கட்டுகின்றனர் .இந்த முறையில் வீட்டில் தரைத்தளம் மட்டும் சேதம் அடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 3 அடி வரை உயர்த்துவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றோம். தற்போது பணி நடைபெறும் இந்த கட்டிடம் புதிதாக கட்டினால்ரூ 40 லட்சம் வரை செலவாகும். தற்போது உயரம் தூக்கி கட்ட 5 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை செலவாகும் என திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்