என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குதிரை மரணம்"
- ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.
- குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொயிலாண்டி அருகே உள்ள கப்பாட் கடற்கரைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்க அங்கு குதிரை சவாரி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடும் ஒரு குதிரையை கடந்த மாதம் 19-ந் தேதி வெறிநாய் கடித்தது.
இதனை தொடர்ந்து அந்த குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதனால் குதிரை ஆரோக்கியமாக காணப்பட்டது. இதனால் ஓணம் பண்டிகையின் போது குதிரை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த குதிரைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. குதிரையை பரிசோதித்த போது தாமதமாக ரேபிஸ் அறிகுறிகள் காணப்பட்டன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இன்று காலை குதிரை பரிதாபமாக இறந்தது.
இதனை தொடர்ந்து சமீப காலமாக குதிரையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குதிரை உரிமையாளர் மற்றும் சவாரி செய்த சுற்றுலா பயணிகள் தகுந்த பரிசோதனைகள் செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.