என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிஃபா வைரஸ்"
- கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு.
- மத்திய சுகாதாரத்துறை மந்திரி நிபா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தியது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார். இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதோடு மாவட்டம் முழுக்க எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.