என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாலுகா அலுவலகம் முற்றுகை"
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
சேலம்:
தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தின் இ-சேவை முடங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முற்றுகை
தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் பெண்கள் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிட்ம அதிகாரிகள் கூறும்போது, இ-சேவை முடங்கியதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இது சரியானதும் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.