என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு போட்டி 2023"
- ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூரை வீழ்த்தியது.
- ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இன்று ஆண்கள் அணிகள் பிரிவில் சவுரவ் கோஷ், அபய்சிங், மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து ஆகியோரை கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
இதேபோல், பெண்கள் அணிகள் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
- முதல் பாதியில் இந்தியா 6-0 என முன்னிலை பெற்றது.
- இரண்டாவது பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி, சிங்கப்பூர் அணியும் மோதின.
முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.
இறுதியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
- பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்களாதேச அணிகள் மோதின.
- முதலில் விளையாடிய வங்காளதேச அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்களாதேச அணிகள் அரையிறுதியில் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய வங்காளதேச அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 52 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை இந்தியா அணி உறுதி செய்துள்ளது.
- ஆசிய விளையாட்டு போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்து உள்ளது.
- ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 672 பதக்கங்களை வென்று இருக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக துவங்கியது. துவக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. இதைத் தொடர்ந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.
- இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.
- ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
இருப்பினும், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.
இன்று மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறும் நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.
இதில், முதல் சுற்றில் நேபாளத்திற்கு எதிராக 11-1, 11-6, 11-8 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதேபோல் 2வது சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனை முகர்ஜி அய்ஹிகா 11-3, 2வது செட்டை11-7, 3வது செட்டை 11-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
நேபாளம் அணிக்கு எதிராக 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை இருந்த நிலையில், 3வது சுற்றிலும் 11-1, 11-5, 11-2 என்ற கணக்கில் போட்டியை இந்தியா கைப்பற்றியது.
இதன்மூலம், ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாள அணியை இந்தியா வீழ்த்தியது.
இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியா.
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- பாகிஸ்தான்- இந்தோனேசியா ஆட்டம் மழையால் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது
- தாய்லாந்தை இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று காலை நடந்த 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை- தாய்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது.
டாஸ் ஜெயித்த தாய்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தாய்லாந்து அணி 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுத்திருவாங் 31 ரன் எடுத்தார்.
இலங்கை தரப்பில் இனோஷி பிரியதர்ஷினி 4 விக்கெட்டும் அட்டப்பட்டு, தில்ஹாரி, சுகந்திகா குமாரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 79 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய கேப்டன் அட்டப்பட்டு 27 ரன்னிலும், அனஷ்கா சஞ்சீவனி 32 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இலங்கை அணி 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
4-வது மற்றும் கடைசி கால் இறுதியில் வங்காள தேசம்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளைமறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும். அன்றைய தினம் நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்திய வீராங்கனைகள் 15 ஓவரில் 173 ரன்கள் குவித்தனர்
- மலேசியா 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
ஆசிய விளையாட்டு போட்டி 2023 இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை என்றாலும் கைப்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டி டி20-யாக நடத்தப்படுகிறது.
இன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின. முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. 5.4 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 39 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்தார். ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய பெண்கள் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மலேசியா அணி களம் இறங்கியது. இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது. அதன்பின் போட்டியை நடத்த சாத்தியமில்லை என கருதிய போட்டி நிர்வாகிகள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். போட்டியில் முடிவு கிடைக்காத போதிலும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது.
- சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.
பெங்களூரு:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.
முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.
இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்