search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் முதுநிலை தேர்வு"

    • நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

    இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
    • தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.

    இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த பலர் முழு மதிப்பெண் பெற்றார்கள் என்றும் சுமார் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீட் முறைகேடு விவகாரம் சர்ச்சையான நிலையில், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் வரிசையில், இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நீட் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

    அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போது நீட் முதுநிலை தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்பட்டதற்கு மற்றொரு சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

    பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை, மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மோடி, இந்த முறை வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை மாஃபியா விவகாரத்தில் எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

    நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். 

    • நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

    மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

    நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது.

    தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்?

    தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு என்று நாங்கள் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.

    மருத்துவராகும் கனவுடன் புறப்படும் ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழுயில் தள்ளும் நீட் அநிநீக்கு, மத்திய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சலுகை அறிவிப்பு.
    • நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

    மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    "நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் தங்களின் விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும்."

    மேலும், "முதுநிலை கலந்தாய்வுக்கான 3-வது சுற்றுக்கான புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைதளத்தில் வெளியிடப்படும்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×