search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவில் கோர்ட் நீதிபதி"

    • இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலம் ஆன்லைனில் இலவச பயிற்சி பெற்றார்.
    • கல்விக்கு மட்டும்தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிர யாக்ராஜ் பகுதியில் உள்ள பராய் ஹராக் கிராமத்தை சேர்ந்தர் ஷோத் அகமது (வயது50). இவர் தனது கிராமத்தில் ஒரு குடிசையில் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அப்சானா பேகம் (47). இவர் பெண்க ளுக்கு துணி தைத்து கொடுக்கிறார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் சமத் (30) சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இளைய மகன் வஜாகத் (24) தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். ஷேசாத் அகமதுவின் 2-வது மகன் அஹத் அகமது (26).

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத் ஐகோர்ட்டில் உள்ள ஒரு வக்கீலிடம் ஜுனியராக சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் அஹத் அகமது, நீதிபதியாக வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரது லட்சியமாகவும் இருந்தது. இந்நிலையில் கொரோனா முழு அடைப்பின் போது அஹத் அகமது நீதிபதி தேர்வுக்காக பயிற்சி பெற விரும்பினார். ஆனால் அவரால் ஏழ்மை காரணமாக பயிற்சி நிறுவனத்தில் சேர முடியவில்லை. இதையடுத்து இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலம் ஆன்லைனில் இலவச பயிற்சி பெற்றார்.

    இந்நிலையில் பயிற்சியை முடித்ததும் அஹத் அகமது நீதிபதி பதவிக்கான தேர்வை எழுதினார். 303 பதவிகளுக்கான தேர்வில் அவர் 157-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அஹத் அகமது கூறுகையில், எங்கள் வீடு மிகவும் சிறிய வீடுதான். குடிசையில் வசித்த எங்களை பெற்றோர் கஷ்டப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வைத்தனர். கல்விக்கு மட்டும்தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது. கல்வி மீது உள்ள நம்பிக்கையால் எங்களுக்கு பலன் கிடைத்துள்ளது" என்றார்.

    அஹத் அகமதுவின் தாயார் அப்சானா பேகம் கூறுகையில், எனது கணவரின் வருமானம் எங்களுக்கு உணவுக்கே போதுமானதாக இல்லை. ஆனால் எங்கள் மகன்களை படிக்க வைக்க விரும்பினோம். எனவே நான் தையல் தொழிலில் ஈடுபட்டேன். நானும், கணவரும் கடினமாக உழைத்தோம். எங்கள் முயற்சி வெற்றி அடைந்துள்ளது என்றார். குடிசையில் வாழ்ந்த அஹத் அகமது தற்போது தனது தாயார் மற்றும் தந்தையை தனக்கு கிடைக்கப் போகும் வசதியான நீதிபதிகள் குடியிருப்புக்கு மாற்றும் நாளுக்காக காத்திருக்கிறார்.

    ×