search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரப்பாளையம் பஸ் நிலையம்"

    • ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை நகரில் அமைந்து ள்ள ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம் புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கார ணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் காணப்படும்.

    விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்தில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. பஸ்நிலையத்திற்குள் உள்ள கழிவறைகளும் போதிய சுகாதாரமின்றி இருப்பதால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும்போது ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் நிலை மேலும் மோசமாகி விடுகிறது.

    குறிப்பாக பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் குளம்போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி யடைகின்றனர். மேலும் பஸ் நிலையப்பகுதிகளில் உள்ள கடைகளும் சுகாதா ரமின்றி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஸ் நிலையத்தை தூய்மை யாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×