என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்வகணபதி"
- மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
- அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.
- 1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி.
- செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை:
1991-ம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 மற்றும் 1996-ம் ஆண்டு களில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த டி.எம்.செல்வ கணபதி சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாயை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்திய மூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்ப ளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டில் மேல்மு றையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சி.பி.ஐ. திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.
சி.பி.ஐ. தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது, அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற தண்ட னையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 9-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
தற்போது செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
- கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் நியமிக்கப்பட்டார்.
பா.ஜனதா தலைவர் பதவி 3 ஆண்டு காலமாகும். 2019 பாராளுமன்ற தேர்தல், கொரோனா பரவல் காரணமாக சாமிநாதன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு சாமிநாதன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டு காலமாக சாமிநாதனே பதவியில் நீடித்தார்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு காலம் பா.ஜனதா தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டார். புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி.யை தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கூறியதாவது:-
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம்.
கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனையை பயன்படுத்துவோம். கூட்டணி முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுப்பார்கள். அவர்களின் முடிவை செயல்படுத்துவது எங்கள் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்வகணபதி எம்.பி. 19.4.1957-ல் பிறந்தவர். எம்.ஏ. எம்.எட். படித்துள்ளார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா குழு தலைவர் பொறுப்பு வகித்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கலைமாமணி விருது வழங்கும் குழு உறுப்பினர், கைப்பந்து சங்க தலைவர், கம்பன் கழக பொருளாளர், லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் செயலாளர், நரேந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் உட்பட பல பொறுப்புகளில் உள்ளார்.
- சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
- பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பா.ஜ.க. கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
அந்த வகையில் சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் 2020-ம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநில தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் முயற்சித்து வந்தனர்.
இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி. நேற்று நியமிக்கப்பட்டார். இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்