search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யது ஹமிதா கல்லூரி"

    • கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
    • அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

    கீழக்கரை

    காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டினை முன்னிட்டு அழகப்பா பல் கலைக்கழக இணைப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற் றது.

    அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

    போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்திலும் அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. அரை இறுதிப் போட்டிகளில் விளையாட கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, ராம நாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.

    இறுதிப்போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியை எளிதில் வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. முதலிடம் பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரவி பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்.

    இப்பரிசளிப்பு விழாவில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் செல்வராஜ் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் உயிர் தகவ லியல் துறை பேராசி ரியர் ஜெயகாந்தன் மற்றும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இப்போட்டிகளின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருது கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் தவசலிங் கம் மற்றும் ஜெபராஜ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.

    காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசி ரியர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் இயக்குனர் ஹபீப் முகமது ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

    ×