search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுற்றுலா தின பேரணி"

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக சுற்றுலா தின பேரணி நடந்தது.
    • பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருமங்கலத்தில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுலா விழிப்பு ணர்வு பேரணி நடைபெற் து. கல்லூரி முதல்வர் டாக்டர். எம்.அப்துல் காதிர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசு கையில், முதன்முதலில் 1980-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதியை சுற்றுலா தின மாக ஐ.நா. சபை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. உலகின் பல்வேறு முக்கிய மான இடங்களை, கலாசார ரீதியாக தெரிந்து கொள்ள உதவுகிறது. சுற்றுலா மூலம் பொருளாதாரம் விரிவடை யும், உலக நாடுகளுக்குள் நல்லுறவு, சமாதானம், கலா சாரம் மேம்படும் என்றார்.

    பேரணி ஏற்பாட்டை ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முனி யாண்டி, பேராசிரியர் கள் செந்தில், அருண், கங்கா தரன், சிங்கராஜா, சீமாட்டி, உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார், சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன் உள்ளிட்டோர் செய்தனர். திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் ஆரம்பித்து தாலுகா அலுவலகம் அருகில் நிறைவுற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×