என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பா ஜ க"
- காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
- தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
சரவணம்பட்டி:
பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 165 ஏக்கர் பரப்பளவிலான குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்வாகி உள்ளது.
இதையடுத்து இந்த குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட பா.ஜ.கவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இந்த தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒரு மணி நேரம் குளத்தில் உள்ள செடி, கொடிகளை கட்சியினருடன் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர், அங்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தார்.
முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டும், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
அதன்படி இன்று கோவையில் நான் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டேன். இதே போன்று அனைவரும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் தூய்மை செய்வதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். இதன் மூலம் விளம்பரம் தேடுவதாக நினைத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கும் இதுபோன்று தூய்மை பணியில் ஈடுபட உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.
தூய்மை பணியை முடித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் கதர் விற்பனை நிலையத்திற்கு சென்று ஏதாவது ஒரு கதர் பொருளை வாங்க வேண்டும்.
பண்டிகை காலத்தில் நாம் ஏராளமான பொருட்கள் வாங்குவோம். அதில் முடிந்தவரை நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நமது மாநிலம் மற்றும் அருகே உள்ள ஊர்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலையிடம் நிருபர்கள், இன்றைய டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் இங்கு அரசியல் வேண்டாம் என தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்