search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "46 இடங்களில்"

    • 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்ச லுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரிப்பதை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் தினமும் 1000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரி க்கும் இடங்களை கண்ட றிந்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் 46 இடங்களில் 15 மருத்துவ குழுக்களை கொண்டு டெங்கு மற்றும் மழைக்கால நோய்காளுக்கான காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்ட மாநகராட்சி பகுதியில் வில்லரசம்பட்டி, ராயபாளையம், இ.பி.பி. நகர், வெண்டிபாளையம் ஆகிய 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வில்லரசம்பட்டி பகுதி மக்களுக்கு திண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ராயபாளை யம் பகுதி மக்களுக்கு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இ.பி.பி. நகர் பகுதி மக்களுக்கு பெரிய சேமூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திலும், வெண்டி பாளை யம் பகுதி மக்களுக்கு நேதாஜி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தி லும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.

    இதேபோல் கோபியில் 3 இடங்களிலும், சத்தியமங்கலத்தில் 3 இடங்களிலும், நம்பியூரில் 3 இடங்களிலும், டி. என். பாளையம் பகுதியில் 3 இடங்களிலும், சென்னி மலை, மொடக்கு றிச்சி, கொடுமுடி, தாள வாடி, அந்தியூர், அம்மா பேட்டை, பவானி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய பகுதி களில் தலா 3 இடங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    முகாம் நடைபெறும் இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவ கூடிய இடங்களை கண்டறியப்பட்டு அங்கு நடத்தப்படுகிறது. இன்று காய்ச்சல் முகாமில் வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது.

    அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிலரை அருகே உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோம சுந்தரம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை அணுகி காய்ச்சல் இருப்பின் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சுய மருத்துவமாக கடை களில் தாமாகவே காய்ச்சலு க்கான மருந்து, மாத்திரை களை வாங்கி உட்கொ ள்வதை தவிர்க்க வேண்டும்.

    மழைக்கால ங்களில் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தேவையற்ற பொரு ட்களை அகற்றி மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கொசு உற்பத்தியை தடுப்பதற்காக தினந்தோறும் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் பிடித்து வைக்க க்கூடிய தொட்டிகள், குடங்கள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து தண்ணீரை மூடி வைத்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டிய தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×