search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் டீசல் விற்பனை நிலையங்கள்"

    • மீனவர்களுக்கு கூடுதல் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே உள்ள குந்துகாலில் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீனவர்களுக்கு டீசல் விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித் தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இந்தியன் ஆயில் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டீசல் விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து மீனவர்களுக்கு தேவையான டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் டீசல் விற்பனை நிலையங்களுடன் கூடுதலாக தொண்டி மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்பொழுது டீசல் விற்பனை மையத்தில் டீசல் மட்டும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மீன வர்களின் கோரிக்கை கேற்ப பெட்ரோல் விற்பனையும் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய வருமானம் மீன் வளர்ச்சி கழகத்திற்கு பயனுள்ளதாக அமையும். அதேபோல் ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ. கோரிக்கைகேற்ப தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன் விற்பனை அங்காடி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை மீனவ மக்கள் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைமை மேலாளர் மாரீசுவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபா வதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர்கள் செல்வ லெட்சுமி, தமிழ்மாறன் , இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவன உதவி மேலாளர் பரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×