search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயிலுக்கு"

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
    • குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே சொத்த விளை ஒசரவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63). இவர் வடசேரியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து செந்திலுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செந்திலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவிலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் இன்று காலை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. தாத்தா செந்தில், வெள்ளை செந்திலை தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் சுற்றி தெரியும் ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு போலீசார் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றசெயலில் ஈடுபடும் எந்த ரவுடியும் தப்பிக்க முடியாது என்றார்.

    ×