search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.6 கோடியே 98 லட்சம்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×