search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்"

    • டெனிகாயிட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றனர்
    • மலர்கள் தூவி மாலை அணிவித்தனர்

    ஆலங்காயம்:

    தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி வரை 5 வது வலைப்பந்து (டெனிகாயிட்) உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்காக 18 பேர் உட்பட 9 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பா டியை சேர்ந்த பயிற்சியாளர் முரளி தலைமையில் கல்லூரி மாணவர்கள் சுகிவர்மன், அபினேஷ் மற்றும் அஞ்சலக ஊழியர் அறிவழகன் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.

    இறுதிப் போட்டியில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கல்லூரி மாணவர் சுகிவர்மன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், ஜூனியர் அணி பிரிவில் ஒரு தங்க பதக்கம் என 2 தங்க பதக்கங்களை வென்றார்.

    அபினேஷ் மற்றும் அறிவழகன் ஆகியோர் சீனியர் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

    சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய பயிற்சியாளர் முரளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சொந்த ஊரான வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாயிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசி யேஷன் நிர்வாகிகள், கிராம மக்கள், பெற்றோர்கள் மலர்கள் தூவியும் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ×