search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருப்ப பாடங்கள் தேர்வு"

    • கிராம பகுதி மாணவ-மாணவிகள் விருப்பமான பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை பயில வேண்டும்.
    • அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தில் அரசின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரை யாடினார். அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெறுவது மற்றும் அடிப் படை வசதிகள் மேம்படுத்து வது குறித்து அவர் பொது மக்களிடம் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் 12-ம் வகுப்போடு நின்று விடுகிறார்கள். பெற் றோ ர்கள் பிள்ளை களை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

    பிள்ளைகளும் தொடர்ந்து ஆர்வமுடன் தங்கள் விருப்பமுள்ள பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை படிக்க வேண்டும். அதற்கேற்ப தற்பொழுது அரசு தொழிற் பயிற்சியுடன் வேலை வாய்ப்புகளும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×