search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை ஊழல் வழக்கு"

    • ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள லோகேஷுக்கு சம்மன் அனுப்பினர்.
    • லோகேஷ் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானதால் அப்பகுதியில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியில் சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள லோகேஷுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் லோகேஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் ஆந்திரா ஐகோர்ட்டில் லோகேஷ் ஆஜராக உத்தரவு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு நீதிபதி இன்று சிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.

    விசாரணையின்போது லோகேஷ்டன் அவரது வக்கீல்கள் இருக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி லோகேஷ் இன்று காலை சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை தொடங்கியது. மாலை 5 மணி வரை சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    லோகேஷ் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானதால் அப்பகுதியில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.

    இதனால் சிஐடி அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×