search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசை படகு"

    • 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
    • 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும், 3 நாட்கள் செல்ல வேண்டும் என்று கூறி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த வாரம் முழுவதும் கடலுக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் சென்றதால் கடந்த வாரம் முழுவதும் மீன்பிடி தொழி லாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் விசைப் படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    ×