search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்து"

    • தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
    • 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல்:

    இரணியல் அருகே வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாலமான மழைநீர் ஓடை கட்டப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

    இந்த நிலையில் வில்லுக்குறி சந்திப்பில் சுமார் 4 அடி நீளம், 4 அடி உயரம் என கட்டப்பட்ட மழைநீர் ஓடை உள்ளது. ஆனால் இந்த ஓடை தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் வெறும் 1 அடி விட்டம் என தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனாலேயே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என ஆக்கிரமித்து உள்ள இந்த சிறிய இடைவெளி வழியாகவே சிறுவன் ஆஷிக் அதிர்ஷ்டவசமாக வெளியேறி இருக்கிறான். இந்த மூலையில் சுருங்கிபோய் கிடக்கும் தில்லாலங்கடி மழைநீர் ஓடையை சிலர் சமூக வலைதளத்தில் படம் பிடித்து பரப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    ×