search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீல்ஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை.
    • பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.

    செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.

    இதைதொடர்ந்து, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    • 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
    • இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.

    இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.

    • சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.

    சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

    ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
    • சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
    • குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

    தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
    • வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20).

    பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார்.

    மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றார்.

    வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடினர்.
    • சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.

    யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது. 

    • 6 ஆவது மாடிக்கு சென்று 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
    • படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் 6 ஆவது மாடியில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கும் போது தவறி விழுந்த 16 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

    11 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி 6 ஆவது மாடிக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது செல்போன் அவளது கையை விட்டு தவறி விழ, அதை பிடிக்க முயன்றபோது அவர் 6 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    ஆனால் களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் அவள் விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். அவளது வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உயரமான இடங்களில் இருந்து செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.

    • 115 அடி உயரமான நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற இளைஞர் குளிக்க சென்றுள்ளார்.
    • மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

    கிட்டத்தட்ட 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.

    அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் கன மழையினால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
    • வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார்.

    சமீபத்தில் வெளியான 'பேட்நியூஸ்' படத்தில் இடம் பெற்ற தௌபா... தௌபா... பாடல் இணையத்தில் வைரலானது. பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா இசையமைத்து எழுதிய இந்த பாடலுக்கு விக்கி கவுஷல், கரண் மற்றும் ட்ரிப்தி டிம்ரி ஆகியோர் அசத்தலாக நடனமாடி இருந்தனர். இந்த பாடல் ஹிட் ஆன நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    இதனால் இணையத்தில் தௌபா... தௌபா... ரீல்ஸ் வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரூபாலிசிங் என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளபா... தௌபா பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற சேலை அணிந்து ஒரு பெண் சிறிய ஓட்டு வீட்டின் முன்பு நின்று குழந்தைகளுடன் சேர்ந்து அசத்தலாக நடனமாடுகிறார்.

    அவரின் இந்த நடனம் பயனர்களை ரசிக்க செய்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அந்த பெண்ணின் நடனத்தை வியந்து பாராட்டினார். பயனர்களும் அந்த பெண்ணின் நடனத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    ×