என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபாயத்தில்"
- ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர்.
- இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.
1995-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுகிறது.
இதுகுறித்து நூலகத்திற்கு வருபவர்கள் கூறுகையில், இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும்.
இதனால் மேற்கூரை இடிந்து விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்து படிக்க வருவதில்லை. மேலும் பொதுமக்கள் சார்பில் பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
மேலும் நூலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.