search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலர் தெரபி சிகிச்சை"

    • சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம்.
    • நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

    நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை அதற்கு உண்டு. நிறங்களை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் 'கலர் தெரபி' சிகிச்சையை பலரும் விரும்புகிறார்கள்.

    சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? சிவப்பு நிறத்தில் உடை, சிவப்பு நிற ஷு அணிந்து செல்லலாம். சிவப்பு நிற துண்டு, சிவப்பு வண்ண தண்ணீர் பாட்டில், சிவப்பு நிற பேக் எடுத்து செல்லலாம். அங்கு உடற்பயிற்சி செய்யும்போது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

    தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை சிவப்பு மற்றும் கருப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும். அதில் இருந்து மீளவைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டு செல்லும்.

    நீண்ட நாள் கனவான விரும்பிய வேலைக்கு நேர்காணல் செல்கிறீர்களா? சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடையை உடுத்தி செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. தன்னம்பிக்கைதரும். மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்வு அளிக்கச் செய்யும்.

    ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. பெண்கள் தங்கள் துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கலாம். அந்த நிறங்கள் கொண்ட துணிகளை அதில் இடம் பெற செய்யலாம். அந்த நிறங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்புடையவை.

    ஏதாவதொரு காரியத்தில் கவனம் செலுத்தும்போது நீல நிறத்தை தேர்வு செய்யலாம். அது அமைதியான மனநிலைக்கு வித்திடும். வேறு பக்கம் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும்.

    சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும்போது ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்யலாம். அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் சிறந்த தேர்வாக இருக்கும். அது விழாவுக்கான உற்சாகத்தை அதிகப்படுத்தும். அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும்.

    ×