search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்"

    • கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தது
    • காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் வழங்கினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(23)நித்திஷ்( 22), ராஜேஷ்(19), தினேஷ்(18) ஆகிய 4 பேர் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் கூலி வேலைக்கு சென்றனர்.

    கடந்த 7-ந் தேதி பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு இவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியது. இதனை அடுத்து கர்நாடக அரசு வழங்கிய இந்த நிவாரண நிதிக்கான காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் நேற்று வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்துக்கு நேரில் வந்து வாணியம்பாடி தாசில்தார் மோகன் முன்னிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் பெற்றோர்களிடம் தலா ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினர்.

    ×