search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senpagavalliamman Temple"

    • இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது.
    • 9-ம் நாளான அடுத்த மாதம் 6-ந்தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு மண்டகப்படி தாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

    இதில் கோவில்பட்டி நக ராட்சி தலைவர் கருணா நிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா,ரவீந்திரன், சண்முக ராஜ், நித்திய லட்சுமி, கோ வில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி கவுதமன் மற்றும் அனைத்து மண்டபப்படி தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என செண்பகவல்லி அம்பாள் பல்வேறு வாக னங்களில் எழுந்தருளி திருவீதி யுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9-ம் நாளான அடுத்த மாதம் 6-ந்தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு 9-ம் திருநாள் மண்டகப்படி தாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற உள்ளது. 8-ந்தேதி ( புதன்கிழமை) பகல் 1 மணிக்கு அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவன நாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தல், 9-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டின ப்பிரவேசம் நடைபெறும்.

    ×