என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலைகள் கொள்ளை"
- கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.
- காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது.
காஞ்சிபுரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் பட்டு சேலை எடுக்க 2 கார்களில் காஞ்சிபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு 4 பட்டு சேலைகளை வாங்கி விட்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அவர்கள் கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர். சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்தபோது ஒரு காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 4 பட்டு சேலைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது. திருமணத்திற்கு எடுத்த பட்டுச்சேலைகள் கொள்ளை போனதால் திருமண விட்டார் சோகம் அடைந்தனர்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.