என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேட் தயாரிக்கும்"
- மேட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், காட்டுப்பாளையம், சிந்த கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேட் (மிதியடி) தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெண்கள் தங்கள் வீடுகளில் இரவு. பகல் பாராமல் மேட் தயாரித்து ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் திங்கட்கிழமைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
மேலும் மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த மேட் தேவைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் திருப்பூரில் இருந்து வேஸ்டேஜ் துணிகளை டெம்போ மூலம் அந்தியூர் பகுதிகளுக்கு கொண்டு வந்து அவற்றை மேட் (கால் மிதியடியாக) பயன்படுத்த தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் அமைந்திருப்பதால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் இதனை தயாரித்து கொடுக்கின்றார்கள்.
மேலும் சிறியரக மேட் 14 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றாவாறு விற்பனை செய்து வருகின்றார்கள்.