search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிகாரம்"

    • படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன.
    • சரும பிரச்சினை, கிருமித்தொற்று போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.

    சில தலைமுறைகளுக்கு முன்பு வீட்டின் முகப்பில் கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றுடன் படிகாரத்தையும் சேர்த்து கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். கண் திருஷ்டியை போக்குவதற்காக இவ்வாறு கட்டுகிறார்கள் என்று பலர் கூறினாலும், இதற்கு பின்னால் மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருந்தது.

    இப்போது இருப்பது போல உடனடி மருத்துவ வசதிகள் இல்லாத அந்த காலத்தில், முதலுதவி சிகிச்சைக்கு கை மருந்தாக பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு கட்டியிருந்தார்கள். படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. சரும பிரச்சினைகள், கிருமித்தொற்று போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

    படிகாரத்தின் பயன்கள்

    * சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியை போக்குவதற்கு படிகாரம் உதவும். சிறிதளவு படிகாரத்தூளுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து மூகத்தில் பூசவும். வாரத்தில் 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * முகப்பரு மற்றும் அதன் மூலம் ஏற்படும் தழும்புகளை நீக்குவதற்கு படிகாரம் சிறந்த தேர்வாக அமையும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு படிகாரத்தூளைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    * இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் தழும்புகள் நீங்கும்.

    * மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டையை சிறிதளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு படிகாரத்தூள் சேர்த்து கலக்கவும். இந்த கரைசலைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப் புண் விரைவிலேயே குணமாகும்.

    * சிறிதளவு படிகாரத்தூளை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் கலக்கவும். மெல்லிய பருத்தித் துணியை அதில் தோய்த்து, கண்களின் மேல் பற்று போட்டால் கண் வலி உடனே குறையும்.

    * தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரத்தை உடலில் தேய்த்துக் கொண்டால் வியர்வை நாற்றம் நீங்கும்.

    * படிகாரத்தூளை தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும். இதை விரல்களில் நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவிலேயே குணமாகும்.

    * குதிகால் வெடிப்பு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு படிகாரத்தை பாதத்தில் நன்றாக தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

    ×