என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜவாஹிருல்லா அறிக்கை"
- ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹி ருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் 3-வது சுற்றுத்திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
தற்போது அப்பகுதியில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.
சோதனை கிணற்றுக் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித் துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓ.என்.ஜி.சி. நிறு வனத்தின் செயலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வில்லை. இதனை முன்மா திரியாகக் கொண்டு ராம நாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.