search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயனம் கலந்த சுவீட்ஸ்"

    • சுவீட்ஸ் கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயன செயற்கை பூச்சு கலந்து இனிப்புகளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×