search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி"

    • 120-ம் ஆண்டு அனுசரிப்பு
    • ஆங்கிலேய அரசு நினைவு தூண் நிறுவியது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல ஏரிகள் நிரம்பி உடைந்து கரையோர கிராமங்களை அடித்து சென்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதன் நினைவாக அப்போதைய ஆங்கிலேய அரசு வாணியம்பாடி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பாக அந்த இடத்தில் ஒரு நினைவு தூண் நிறுவியது.

    அந்த நினைவு தூணில் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி 120-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்ரமணியன், பாலாறு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

    ×