search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு உடல் அடக்கம்"

    • டி.ஐ.ஜி. அஞ்சலி செலுத்தினார்
    • மீட்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட் டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். உடனடியாக அங்கு விரைந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்த, வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த முரளி (வயது 45) என்பவரும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

    இதை தொடர்ந்து முரளி போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கேயேபடுத்து ஓய்வெடுத்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஒலித்த போது எடுக்காததால், சக போலீசார் எழுப்ப முயன்றனர்.

    அப்போது அவர் சுயநினைவின்றி இருந்ததால், கிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏட்டு முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான ஆம்பூருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தது.

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், ஏட்டு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், செந்தில் உள்ளிட்ட போலீசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஏட்டு முரளியின் வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    உயிரிழந்த ஏட்டு முரளி கடந்த 2003-ம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆம்பூர் தாலுக்கா மற்றும் டவுன், உமராபாத், வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலை யங்களில் பணியாற்றினார்.

    அவருக்கு திருமணம் மனைவி மற்றும் சஞ்சனா (7) என்ற மகளும், லோகித் (5) என்ற மகன் உள்ளனர்.

    ×