search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லியல் கருத்தரங்கம்"

    • பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்துரைத்தார்.
    • இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம்

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 2 நாள் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவி ஆண்டே நிஷ்மா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங், கல்லூரி தாளாளர் டாக்டர் மரியவில்லியம், சிவில் துறை தலைவர் ஜெஸ்சிமோள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக செம்பவளம் ஆய்வு தளம் இயக்குனர் செந்தீ நடராசன் பங்கேற்று கோவில் கட்டிடக்கலை பற்றி விளக்கினார். இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம் செய்து பயிற்சி கொடுத்தார். அதன் பின் பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்து ரைத்தார்.

    2-ம் நாள் களப்பணியாக பத்மநாபபுரம் தொல்லியல் காட்சியம், திருவதாங்கோடு புனித தோமஸ், பெரியநாயகி அம்மாள் சர்ச்சி கல்வெட்டை மணவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவில் துறை பேராசிரியர்கள், பேராசிரியர் ஸ்மைலின் சைனி, நூலக அறிவியல் துறை தலைவர் டாக்டர் விஜயகுமார் , தமிழ் மன்ற பொறுப்பாளர் பேராசிரியர் மேரி ஜெனிதா செய்திருந்தனர்.

    ×